ப்ளீஸ்ஸ என்னை விட்ருங்க!’ `மோசடி பாய் ஃப்ரெண்ட்’ குறித்து `பிக்பாஸ்’ ஐஸ்வர்யா
பண மோசடி வழக்கில் `பிக் பாஸ்’ ஐஸ்வர்யாவின் பாய் ஃப்ரெண்ட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பண மோசடி, வழக்கு, சிறைஸ `பிக் பாஸி’ல் ஐஸ்வர்யாவிடம் பேசிய கோபியின் பகீர் பின்னணி’ – எனக் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை வெளியிட்டிருந்தது,
விகடன் இணையதளம். ஐந்து மாதங்கள் கடந்தநிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யா தத்தாவின் நண்பர் கோபி கிருஷ்ணன்.
இந்த விவகாரத்துக்குள் போவதற்கு முன், கோபி கிருஷ்ணன் – பிக் பாஸ் தொடர்பு குறித்து முதலில் பார்க்கலாம்.
`பிக் பாஸ்’ சீஸன் 2-ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா, `பிக் பாஸ்’ வீட்டுக்குள் வலம் வந்தபோது,
அவரது கையில் குத்தியிருந்த பச்சை மூலமே ‘கோபி’ என்ற பெயர் முதல் முதலாக வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ‘யார் இந்தக் கோபி?’ என சக போட்டியாளர்கள் கேட்டபோது, தன் பாய் ஃப்ரெண்ட் என்றார் ஐஸ்வர்யா.
நிகழ்ச்சியின் கடைசி சில எபிசோடுகளில், போட்டியாளர்களுக்கு அவர்கள் விரும்பியவர்களுடன் அலைபேசியில் பேச வாய்ப்பபு அளிக்கப்பட்டது.
அப்போது, கமல்ஹாசன் முன்னிலையிலேயே ஐஸ்வர்யா இந்தக் கோபியுடன் பேசினார். எல்லா இடத்திலும் ‘கோபி’ என்றே உச்சரித்த ஐஸ்வர்யா, மறந்தும் ‘கோபி கிருஷ்ணன்’ என்ற அந்த முழு பெயரைப் பயன்படுத்தவே இல்லை.

இந்நிலையில்தான், `ஐஸ்வர்யாவிடம் பேசிய அந்த கோபி, கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய புகாரில் கைதாகி சிறை சென்றவர்;
இவரது முழுப் பெயர் கோபி கிருஷ்ணன்’ என்றும், `இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் இவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும் ஒரு சோர்ஸ் நமக்குக் கிடைக்க, விசாரித்து அதை உறுதிப்படுத்தினோம்.
ஆனால், அன்று அரசியல் செல்வாக்கால் கைதான சில நாள்களிலேயே சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறார் கோபி.
அப்போதே கோபி கிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட சிலரிடமும் பேசியிருந்தோம். `அந்தாளு தொடங்கிய போலி நிறுவனங்களில் நடிகை ஐஸ்வர்யாவும் பார்ட்னரா இருந்தாங்க’ உள்ளிட்ட சில விஷயங்களையும் கூடுதல் தகவலாகச் சொன்னார்கள்.
`கோபி கிருஷ்ணன் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் அப்போதுதான் ஐஸ்வர்யா அவருக்கு அறிமுகமானதாகவும் சொன்ன வேறு சிலர், ‘ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ளே வந்ததே, கோபி கிருஷ்ணனின் பக்கா ஸ்கெட்ச்’ என அடித்துச் சொன்னார்கள்.
‘பிக் பாஸ்’ மூலம் கிடைக்கும் புகழை வைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் சம்பாதிப்பதே நோக்கமாம்! இந்த இடத்தில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எது எப்படியோ.. ‘பிக் பாஸ்’ முடிந்து ரன்னராக வெளியே வந்த ஐஸ்வர்யாவிடம், கோபி குறித்துக் கேட்டதற்கு, ‘முன்னாடி நண்பரா இருந்தார்; அவர் பண்ற பிசினஸ்ல எனக்கு என்ன ரோல் இருக்க முடியும்?’ என்ற ரீதியில் மழுப்பலான பதிலையே தந்தார்.
இந்த நிலையில்தான், தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோபி கிருஷ்ணன்.
முதலில் கோபியின் கூட்டாளிகள் சிலரைக் கைது செய்த போலீஸ், அவர்களது வாக்குமூலத்தை வைத்தே சென்னை விமான நிலையம் வந்திறங்கியபோது கோபி கிருஷ்ணனைக் கைது செய்திருக்கிறது.
காவல்துறை தரப்பில் பேசியபோது, ‘போலி நிறுவனங்கள் நடத்தியது, வங்கிக் கடன் வாங்கித் தர்றதா மக்கள்கிட்ட பணம் பறித்து ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்ல கைது செய்யப்பட்டிருக்கிறார் கோபி.
இவரோட தொடர்புல இருக்கிறவங்க குறித்தும் விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். இவருடன் மோசடியில் உடந்தையாயாக இருந்த அனைவரும் கைது செய்யப்படுவாங்க’ என்கிறார்கள்.
ஹைலைட் என்னவென்றால், கோபி கிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது, ஐஸ்வர்யாவும் உடன் இருந்திருக்கிறார் என்பதாகச் சொல்கிறார்கள்.
சேனல் ஒன்றின் ஏற்பாட்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த கலை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவும் கோபி கிருஷ்ணனும் பங்கேற்றுத் திரும்பியபோதுதான், சென்னை விமான நிலையத்தில் இந்தக் கைது சம்பவம் நிகழ்ந்திருக்கிறதாம்.
இந்த விவாகாரம் குறித்துப் பேசிய ஐஸ்வர்யா, `இந்த விவகாரத்தில் என்னை தயவு செஞ்சு தொடர்புபடுத்தாதீங்க. நான் ஷூட்டிங் முடிஞ்சு இன்னைக்குத்தான் சென்னைக்கு வந்திருக்கேன். இந்தத் தகவலை உங்களுக்கு யார் சொன்னாங்களோ, அவங்ககிட்ட இதைப் பத்தி பேசணும்’ என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.