ஆர்யாவை பார்த்தால் அடித்துவிடுவேன்!-
11 Mar,2019
ஆர்யாவை பார்த்தால் அடித்துவிடுவேன்!-
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல இளம் பெண்கள் கலந்துக்கொண்டனர்.
அவர்களில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்து கொள்ளலாம் என்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதற்காக கலந்துக்கொண்ட பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேரினர்.
இறுதியாக மூன்று பெண் போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் சுசானா, சீதாலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் யாரையும் தேர்வு செய்யாமல் சப்பை காரணத்தை கட்டி விலகி கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து நடிகர் ஆர்யா – சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் நடிகர் ஆர்யா சாயிஷா உடனான காதலை காதலர் தினத்தன்று அறிவித்தார். மேலும் இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இருவரும் திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான குஹாசினி தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.அதில்,
“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒருவகையான முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட (ஸ்கிரிப்டட்) நிகழ்ச்சி தான். ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து பலரும் என்னைக் கேட்கிறார்கள்.
வெளிநாட்டில் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால் கலந்து கொள்ளாதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. இப்போது ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து கேள்விப்பட்டவுடன் கோபமடைந்தேன்.
ஆர்யா கேமிராவைப் பார்த்தால் அப்படியே மாறிவிடுவார். அவரைப் பார்த்தால் அடித்துவிடுவேன். திருமணத்துக்கு அழைத்தாலும் நான் போகமாட்டேன்.
நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு இரண்டு மூன்று பெரிய படங்களிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான் இன்டிபென்டென்ட் ஆல்பம் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்