91-வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு குறும்படத்துக்கு விருது!
25 Feb,2019
சினிமாத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுத்தோறும் வழங்கபட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது. 1989-ம் ஆண்டுக்குப் பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது. தொகுப்பாளராக நியமிக்கப்பட்ட கெவின் ஹார்ட் விலகியதால் தொகுப்பாளரின்றி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்த பிளாக் பேந்தர் திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
பிளாக் பேந்தர் திரைப்படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளராக ரூத் கார்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் திரைப்படம் 7 பிரிவுகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆவணப்படமாக `ப்ரீ சோலோ’ (FREE SOLO) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை `ரோமா’ (ROMA) திரைப்படத்துக்காக ஒளிப்பதிவாளர் அப்போன்சோ குவாரன் பெற்றுள்ளார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது `ஈஸ் பேல் ஸ்டீரிட் குட் டாக்’ (Is beale street could talk) படத்தில் நடித்த ரெஜினா கிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது `வைஸ்’ (VICE) படத்தில் பணியாற்றி மூன்று பேர் பெற்றுள்ளனர்.
மெக்ஸிகன் படமான ‘ரோமா’ சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
சிறந்த படத்தொகுப்புக்கான விருதை வென்றது பொஹமியன் ராப்சோடி (Bohemian rhapsody)
சிறந்த துணை நடிகருக்கான விருதை கிரீன் புக் திரைப்படத்துக்காக மேஹர்ஷலா அலி (Mahershala ali) வென்றுள்ளார்
சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது ஸ்பைடர் மேன் (spider man into the spider verse) திரைப்படத்துக்கு வழங்கபட்டுள்ளது
சிறந்த அனிமேஷன் குறும்படமாக BAO திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெண்கள் குறித்த period. end of sentence ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் அவதி குறித்து இந்தக் குறும்படம் பேசியிருந்தது. கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கின் தயாரித்ததை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான (visual effects) விருது First Man திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒரிஜினல் ஸ்கீன்ப்ளேவுக்கான (original screenplay) விருதை கிரீன் புக் (Green Book) திரைப்படம் பெற்றுள்ளது
சிறந்த இசையமைப்பாளர் (original score) விருது பிளாக் பேந்தர் திரைப்படத்துக்காக Ludwig Gய்ransson என்பவருக்கு வழங்கபட்டுள்ளது.
சிறந்த பாடலுக்கான விருதை A Star Is Born என்ற படத்தில் இடபெற்றிருந்த Shallow பாடல் பெற்றுள்ளது. இதை Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando, Andrew Wyatt ஆகியோர் வென்றுள்ளனர்.
சிறந்த நடிகருக்கான விருது Bohemian Rhapsody படத்துக்காக Rami Malek என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பாடகரான ஃபெரட்டி மெர்குரி (freddie mercury) என்பவரின் வாழ்க்கையை மையபடுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.