ஆர்யா-சயீஷா- வெளியான புகைப்படங்கள்!
18 Feb,2019
தமிழ் சினிமாவில் இந்த வருடம் அதிக பிரபலங்களின் திருமணம் நடக்க இருக்கிறது. இதுவரை ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் ஜாங்கிரி மதுமிதா இரு பிரபலங்களின் திருமணம் முடிந்துள்ளது.
விஷால் திருமணம் எப்போது என்று தெரியவில்லை, ஆனால் நடிகர் ஆர்யா தனது திருமணம் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது என்று அறிவித்துவிட்டார்.
அவர் சயீஷாவை பெற்றோர்கள் முடிவு செய்து திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது அவர்கள் காதலிக்கவில்லை. இந்த நேரத்தில் முதன்முதலாக அவர்கள் ஜோடியாக வெளியூர் சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.