இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
17 Feb,2019
டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன.
இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் இளைய சகோதரர், குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவரது தந்தை டி. ராஜேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், 80-களில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார்.
இவருடைய மூத்த மகனான சிலம்பரசன் என்கிற சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரும் திரைப்படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார்.
இவருடைய இளைய சகோதரரான குறளரசன் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பணியாற்ற அவர் ஆயத்தமாகி வந்தார்.
இந்நிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தந்தை டி. ராஜேந்திரன் மற்றும் தாய் உஷா முன்னிலையில் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இயக்குநர் டி. ராஜேந்திரன், எம்மதமும் சம்மதம் மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறேன். மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதில் மகிழ்ச்சி. சிம்பு சிவபக்தராக இருக்கிறார். மகள் இலக்கியா கிறிஸ்துவ மதத்தையும், இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தையும் பின்பற்றுகின்றனர் என்று டி.ஆர். கூறினார்.