சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!
16 Feb,2019
விஜய் சேதுபதி மீது இன்று மக்கள் பலரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவரின் படங்களுக்கு குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். சினிமாவில் அவரின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.
அண்மையில் அவரின் நடிப்பில் வந்த 96 படம் நல்ல வரவேற்பை பெற்று 100ம் நாள் கொண்டாட்டத்தை எட்டியது. இந்நிலையில் அண்மையில் சாலை முழுக்க போட ஒரு பொண்ணு வேணும் என இரட்டை அர்த்தத்தில் எழுதியிருந்த போஸ்டர் ஒட்டப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதனையடுத்து விஜய் சேதுபதி இந்த போஸ்டரை வெளியிடுவதாக தகவல் வெளியானது. ஆனால் போஸ்டர் சர்ச்சையான பின் அது படத்தின் டைட்டில் என தெரியவந்தது. இதனால் விஜய் சேதுபதியின் பேருக்கு களங்கத்தை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் டிவிட்டரில் அந்த போஸ்டரையும், படக்குழுவையும் கடுமையாக சாடியுள்ளார். இதில் அவர் இந்த மாதிரி பப்ளிசிட்டி பண்ணி ஒரு புதிய படத்தை புரோமோட் பண்றதுக்கு பதில், வேறு எதாவது தொழில் செய்யலாம். தமிழ் சினிமாவை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்