சிம்புவின் ஆசை இப்போது நிறைவேறிவிட்டது?!
01 Feb,2019
சமூகவலைதளத்தில் சமீபகாலமாக சிம்பு பற்றிய விசயங்கள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர் அண்டா நிறைய பால் ஊற்றுங்கள் என சொன்னது சர்ச்சையாகிவிட்டது.
அபிஷேகம் செய்ய சொன்னதாக நான் சொல்லவில்லை என அந்த சர்ச்சையில் பின் அவர் பதிலளித்தார். பிரச்சனைக்கு நடுவிலும் அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
நாளை அவரின் நடிப்பில் வந்த ராஜா வான் தருவேன் படம் வெளியாகவுள்ளது. இப்படம் பொங்கல் போட்டியில் களத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனால் விஸ்வாசம், பேட்ட படங்களால் இப்படம் தள்ளிவைக்கப்பட்டது.
இரு படங்களுடன் மோத வேண்டும் என்பதே சிம்புவின் ஆசை. படம் தற்போது தள்ளிப்போய் வந்தாலும் அவரின் ஆசைப்படியே இப்போது நடக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
விஸ்வாசம், பேட்ட படங்கள் 3 வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படங்களுக்கு நடுவே தான் தற்போது சிம்புவின் படமும் இறங்குகிறது.