நமீதாவை வைத்துக்கொண்டு மாலை போட்டது தப்பு ; பாக்கியராஜ் கருத்தால் சர்ச்சை
01 Feb,2019
நமிதாவை கட்டிக்கிட்டு எப்படி இவரால் சும்மா இருக்க முடியுது என பாக்யராஜ் நமிதாவின் கணவர் வீரை கலாய்த்துள்ளார்.
புது முகங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் கபடி வீரன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது நான் நமிதாவின் கணவன் வீரை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டேன். காரணம் அவர் என்னிடம் மலைக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறேன் என கூறினார்.
நான் ஷாக் ஆகிட்டேன். நமிதா மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு ஒரு நாள், இரண்டு நாள் விரதம் இருக்கலாம். 45 நாள் எப்படி இருக்கிறாரோ என அவரை கலாய்த்துள்ளார்.
இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வயது வித்தியாசமில்லாமல், ஒரு இந்துவை எப்படி பாக்கியராஜ் இப்படி அவமதித்து பொது மேடையில் பேசுவது என, நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிய ஆரம்பித்துள்ளனர்.
போகப் போக, பாக்கியராஜ் எதை பேசினாலும், அது சர்ச்சையாவது வழக்கமாகி விட்டது