விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு அழகி
24 Jan,2019
ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மார்டினா பிக். பிறப்பால் இளம்சிவப்பு நிறம் கொண்ட இவர் ஆப்பிரிக்கா நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு Melanin என்னும் ஊசி உதவியால் கருமை நிறம் பெற்றார்.
ஆப்பிரிக்கா நாட்டு பெண்களை போல் மாறவேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஊசி செலுத்தி வரும் மார்டினா பிக், தனது மார்பக வளர்ச்சிக்காகவும் சில விசேஷ சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.
ஆப்பிரிக்க பெண்களை போல் முகம், உடல் பாகங்களை மேற்கொள்ள பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்ட இவர், தற்போது தனது மூக்கு, உதடு மற்றும் பின்பகுதி ஆகியவற்றையும் ஆப்பிரிக்க பெண்களை போல் உருமாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கென்யா பயணம் மேற்கொண்ட மார்டினா, கன்யா நாட்டு பாரம்பரிய ஆடைகளை உடுத்தி வளம் வந்தார். மேலும் உள்நாட்டு மக்களின் தாய்மொழியினையும் கற்றுக்கொண்டார்.
பின்னர் அந்நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ப தனது பெயரினையும் மல்லைக்கா குப்வா என பெயர் மாற்றிக்கொண்டார்.