திரிஷாவுடன் டேட்டிங் எல்லாம் செய்தேன்; ஒப்பனாக ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்!
25 Dec,2018
சினிமா பிரபலங்கள் நிஜத்தில் காதலர்களாக மாறுவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. சூர்யா-ஜோதிகா, சமந்தா-நாக சைத்தன்யா, அஜித்-ஷாலினி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரபலங்களின் ஒருசிலர் நிஜத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைகின்றனர் ஆனால் பலர் காதலிக்கும் போதே பிரச்சனை ஏற்பட்டு பிரிகின்றனர்.
அப்படி திரிஷா-ராணா இருவரும் காதலித்தார்கள் ஆனால் திருமணம் ஆகவில்லை பிரிந்துவிட்டார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ராணாவிடம், திரிஷாவுடன் காதல் குறித்து கேட்டபோது அவர், இருவரும் நல்ல நண்பர்கள், காதலித்தோம், டேட்டிங் சென்றோம் ஆனால் சில விஷயங்கள் செட் ஆகவில்லை என்றார்.