காசு கேட்டு மிரட்டும் இளையராஜா!
27 Nov,2018
இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பாட கூடாது என SPBயுடன் இளையராஜா பிரச்சனை செய்தது முன்பே பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இளையராஜா நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் “நீங்கள் என்னுடைய பாட்டை தான் பாடுகிறீர்கள். இலவசமாக பாடவில்லை, பணம் வாங்குகிறீர்கள். பாட்டு என்னுடையது – ஆனால் பணத்தில் பங்கு தரமாடீர்கள்” என இளையராஜா பேசியுள்ளார்.
முன் அனுமதி இல்லாமல் என் பாடலை பாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.