ஒரு நாள் இரவுக்கு மட்டும் அழைத்த நபர்: நடிகை என்ன ?
24 Nov,2018
திருவனந்தபுரம்: தன்னை ஒரு நாள் இரவு மட்டும் படுக்கைக்கு வருமாறு அழைத்த நபரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நடிகை நேஹா சக்சேனா.
மம்மூட்டியின் கசாபா படம் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை நேஹா சக்சேனா. மோகன்லாலுடனும் நடித்துள்ளார்.
தமிழில் அர்ஜுனுடன் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்துள்ளார். அவரை ஒருவர் ஒரு நாள் இரவுக்கு மட்டும் வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு நேஹாவோ, நான் உன்னை மீடியாவிடம் அழைத்துச் சென்று பிரபலமாக்குகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேஹாவின் பி.ஆர். மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பி அவர் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார்.
அந்த வாட்ஸ்ஆப் சாட்டை நேஹா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அந்த நபரை ஊர், உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.
இந்த நாய்க்கு பாடம் கற்பிக்கவும். இதை நான் அனைத்து மீடியாக்களுக்கும் அனுப்புகிறேன். அவர் பெண்களிடம் எப்படி நடக்கிறார் என்பதை அவரின் குடும்பம் தெரிந்து கொள்ளட்டும்.
இது போன்ற விஷயங்களுக்கு எதிராக பேச நான் பயப்படவில்லை என்கிறார் நேஹா. இது போன்ற நாய்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு நடிகை என்பதையும் தாண்டி நான் ஒரு பெண்.
ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இதற்கு எதிராக நான் குரல் கொடுக்கவில்லை என்றாால் இது போன்ற சங்கடங்களை அனுவிக்கும் சாதாரண பெண்ணுக்கு நான் எந்த மாதிரியான முன் உதாரணமாக இருக்க முடியும்? என்று நேஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மாற வேண்டும் என்கிறோம். ஆனால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றால் தான் இந்தியா மாறும். அப்படி செய்தால் தான் சில நாய்கள் காணாமல் போகும்.
இன்னொரு நிர்பயா, ஜிஷா இருக்காது. நான் எனக்காகவும், பிற பெண்களுக்காகவும் குரல் கொடுக்கிறேன். இது தான் நான். நான் மாற மாட்டேன் என்கிறார் நேஹா.
தன்னை ஒரு நாள் இரவுக்கு வருமாறு அழைத்த நபரின் முகவரியை கண்டுபிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் நேஹா. அந்த நபரின் பெயர் எல்சன் லோகிதக்ஷன். அவருக்கு பாடம் புகட்டுமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் நேஹா.
தனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எல்சனின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளின் விபரங்களை வெளியிட்டுள்ளார் நேஹா. திருமணமாகியும் பிற பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் இது போன்ற நபர்கள் இருக்கக் கூடாது என்கிறார் நேஹா.
நேஹாவின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த எல்சன் தனது செல்போனை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எல்சன் பொய் சொல்வதாக கூறுகிறார் நேஹா.