மிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள ஈழத்தமிழர்!
21 Nov,2018
கத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரணமாக மிகப்பெரிய தொகையை அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே இந்தப் புயலுக்கு தனி நபராக பெரும் தொகையைக் கொடுத்துள்ள ஒரே நபர் திரு அல்லிராஜா சுபாஷ் கரன் ஆவார். இவர் லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஈழத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
தமிழகத்தில் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு பல கோடிகளை சம்பாதித்தவர்கள் மத்தியில். தமிழகத்திற்கு ஒரு கஷ்டம் என்று வரும்போது தான் ஈட்டிய பணத்தில் அவர் பெரும் தொகையை தமிழக மக்களுக்கே கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களிலும் நிவாரண பணிகளில் ஈடுபட கொடுப்பதாக லைகா குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.