நயன்தாராவை நினைத்து காதல் ஏக்கத்தில் தவிக்கும் இயக்குனர்
20 Nov,2018
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2 வருடத்துக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்ததுடன் அவரை ஹீரோவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அடிக்கடி தகவல் பரவினாலும் நயன்தாராவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார்.
இதனால் காதல் ஏக்கம் தீராமல் நயனை புகழ்ந்து தள்ளிய வண்ணம் தனது இணைய தள பக்கத்தில மெசேஜ் பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுக்கு நேற்று 34வது பிறந்தநாள் ஆகும். அதை தடபுடலாக கொண்டாட விக்னேஷ் சிவன் ஏற்பாடு செய்தார். இதற்காக ஹால் ஒன்றை புக் செய்து சீரியல் விளக்குகள், தோரணங்கள், பலூன்கள் கட்டி அலங்காரம் செய்ததுடன் பிரமாண்டமான ஸ்பெஷல் சாக்லெட் கேக் வரவழைத்தார்.
அதில், ‘ஹாப்பி பர்த்டே நயன். வித் லாட்ஸ் ஆப் லவ்’ (அதிக காதலுடன் நயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்) என எழுதியிருந்தார். மேலும் தனது இணைய தள பக்கத்தில் தன்னுடைய புரபைல் படத்தை நீக்கிவிட்டு நயன்தாரா படத்தை வைத்திருந்தார். விக்னேஷ் சிவனின் அன்பை பார்த்து வியந்த நயன்தாரா அவரை கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார். தற்போது அஜீத்துடன், ‘விஸ்வாசம்’ படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன், ‘சே ரா நரசிம்ஹா ரெட்டி’ படத்திலும் நடித்து வருகிறார்.