சரக்கு அடிப்பது சிகரெட் புகைப்பது சொந்த விஷயம்
01 Nov,2018
மீடூ இயக்கத்தில் நடிகைகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவருகின்றனர். பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர். இதையடுத்து நடிகைகள் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது ஒரு சில நடிகைகள் பொது இடத்தில் முத்தமிடுவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு அந்த புகைப்படங்களை இணைய தளத்தில் பகிரத் தொடங்கி உள்ளனர்.
இந்தியில், ‘பியார் மெயின் கபி கபி’, ‘நா கஹர் கே நா கஹாட் கீ’, ‘லங்கா’, ‘குருஷேத்ரா’ போன்ற படங்களில் நடித்திருக்கும் ஷ்வேதா சால்வே, தனது இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து கால்களைமடித்து குத்தவைத்து அமர்ந்தபடி சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளுவதுபோலவும், கோப்பையில் சரக்கு ஊற்றி குடிப்பதுபோவும் புகைப்படங்கள் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘ஆம் நான் குடிக்கிறேன், புகைப்பிடிக்கிறேன். நான் நிஜமாக இருக்கிறேன். இதைவைத்து என்னை யாரும் எடைபோட முடியாது. இதை வைத்து என்னை யாரும் தவறானவள் என்று எப்படி கூற முடியும். யாரும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் சொல்லவில்லை.
அதே மரியாதையை மற்றவர்களிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். என்னை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. இணைய தளத்தில் என்னை பின்பற்ற (ஃபாலோ) சொல்லி யாருக்கும் நாம் சன்மானம் தருவதில்லை. நீங்களே விரும்பி பின்பற்றுகிறீர்கள். என்னை பின்தொடர்வதும், விலகி செல்வதும் உங்கள் விருப்பம்’ என கூறியிருக்கிறார்.