4 வயதிலேயே பாலியல் துன்புறுத்தல்; நடிகை பார்வதி ஓபன் டாக்
01 Nov,2018
நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்தும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் மீண்டும் உறுப்பினராக சேர்த்தது தவறு என்றும் போர்க்கொடி உயர்த்தியவர் நடிகை பார்வதி. நேற்று மும்பையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பார்வதி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
பாலியல் துன்புறுத்தல் என்பது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. 3 அல்லது 4 வயதில் எனக்கு இது நேர்ந்தது. அப்போது எனக்கு அதுபுரியவில்லை, அதை உணர்வதற்கு எனக்கு 17 வருடம் ஆனது. ஆனால் நான் துன்புறுத்தலுக்குள்ளாகியிருக்கிறேன். இந்த துன்புறுத்தல் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு மேலும் 12 வருடம் ஆனது. தினமும் இதுபோன்ற பாதுகாப்பிற்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.
அதை ஏற்றுக்கொள்வதும், தவிர்ப்பதும் தினமும் நடக்கும் பிரச்னை. துணிச்சலாகவும், வெளிப்படையாக பேசுபவளாகவும் என்னை எனது பெற்றோர் வளர்த்துள்ளனர். பாதுகாப்பு என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனதளவிலும் இந்த போாராட்டம் தொடர்கிறது. அதற்கான சக்தியை எல்லோரும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு பார்வதி கூறினார்.