இந்திய திரைப்படங்களுக்கு தடை!
29 Oct,2018
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிபதி சாஹிப் நிஷார், “இந்தியா பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை சுருக்கிவிட்டபோது, நாம் ஏன் அவர்களுடைய சேனல்களுக்கு தடை விதிக்கக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலிகளில் இந்திய தொடர்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டதும் பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு அந்த தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.