ரஜினி கமலுக்கு போட்டியாக அரசியல் கழத்தில் பிரபு?
29 Oct,2018
தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. பல சினிமா பிரபலங்கள் தங்களுக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கால் கட்சி மூலம் அரசியல் பதவிகளை வகித்துள்ளனர்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்கள் சினிமாத்துறை சம்மந்தப்பட்டவர்கள் தான். பல சாதனைகளை செய்த இதுபோன்ற மூத்த தலைவர்கள் மறைந்துவிட்ட நிலையில் அவர்கள் இடம் வெற்றிடமாக தான் இருக்கிறது.
ரஜினி, கமலும் அரசியலில் இறங்கிவிட்ட நிலையில் அவர்களுக்கு இணையாக இருந்த நடிகர் பிரபுவை காங்கிரஸ் கட்சியில் இணைக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுக்க சிதறி கிடக்கும் அவரின் அப்பா சிவாஜி கணேசன் மற்றும், பிரபுவின் ரசிகர்களை ஒன்று சேர்க்க தயாரிப்பாளரும் பிரபுவின் அண்ணனுமான ராம்குமார் தீவிர முயற்சியில் உள்ளாராம்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வந்து அன்னை இல்லத்திற்கு சென்று சிவாஜி கணேசனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின் பிரபுவை இணைக்கிறார்களாம்.
இதே கட்சியில் குஷ்பூ, நக்மா ஆகியோர் பதவியில் இருக்கிறார்கள். சிவாஜி கணேசன் அரசியில் ஈடுப்பட்டு பின் அரசியலை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.