சர்கார் கதை விவகாரம்! உண்மையை போட்டுடைத்த பிரபலம்!
29 Oct,2018
சர்க்கார் படம் தற்போது திருட்டு கதை என்ற சர்ச்சையில் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் வருண் ராஜேந்திரன் என்பவர் செங்கோல் என்ற படத்திற்காக நான் எழுதிய கதை என வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதில் படக்குழு வரும் 31 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் வசன கர்த்தா ஜெயமோகன் இவ்விசயம் பற்றி பேசியுள்ளார்.
இதில் அவர் நான் இதுவரை பணியாற்றிய படங்களிலே இதற்கு தான் அதிகமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். சென்னையில் ஒன்றரை மாதம் தங்கி இரவு, பகல் என ஒவ்வொரு விசயத்தை விவாதித்து தான் எழுதினேன்.
சிவாஜி கணேசனின் ஓட்டை திருடி யாரோ போட்டு விட்டார்கள் என்ற ஒன் லைன் கதையை வைத்து தான் முழுபடத்தையும் எடுத்துள்ளோம். சமகால விசயங்கள் ஒரு கைப்பிடி அளவு தான்.
விஜய் இப்படத்தில் ஒரு கார்ப்பொரேட் CEO அவருக்கு செட்டாகும் படிதான் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நினைத்தால் இது முன்பே வந்துவிட்டது, காப்பி என சொல்லிவிடுவார்களோ? சினிமாவிலும் நடக்கும் படி இருக்க வேண்டும், புதுமையாக செய்து புரியாமல் போய் விடக்கூடாது.
இன்னும் சொல்லப்போனால் கதை எழுத விவாதிக்க தொடங்கி 4 நாட்கள் அவரை இதே ஒன்லைன் ஸ்டோரி தான் இருந்ததாம். பின்னர் தான் முதல் காட்சியை பிடித்துவிட்டு மற்றதை பார்த்து செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
ஒன்லைன் இருந்தால் போது விஜய்யை வைத்து படமே உருவாக்கிவிடலாம். மற்றபடி கதை திருட்டு என்று சொல்வதெல்லாம் வணிக வியாபாரம் என கூறியுள்ளார்.