இடைத்தேர்தலில் போட்டி என கமல் அறிவிப்பு: ரஜினியின் முடிவு என்ன?
27 Oct,2018
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும் கமல் தெரிவித்தார்.
ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தகுதி நீக்க வழக்கினால் காலியான 18 தொகுதிகள் உள்பட மொத்தமுள்ள 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
கமலஹாசன் அறிவிப்பினை அடுத்து வரும் டிசம்பரில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ரஜினியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தினகரன் கட்சி, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக, தேமுதிக, என பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமல், ரஜினி கட்சிகளும் போட்டியிட்டால் நிச்சயம் ஒரு மினி சட்டமன்ற தேர்தல் போன்றே இந்த இடைத்தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.