நடிகை ஸ்ரேயாவின் தனிப்பட்ட வாழ்க்கை
27 Oct,2018
தமிழில் ரஜினி ( #Rajini ), விஜய் ( #vijay ), தனுஷ் ( #Dhanush ) என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சுற்றை முடித்து விட்ட ஸ்ரேயா ( #Shriya ) திருமணத்துக்கு பின்பும் நரகாசுரன் படம் மூலம் அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ’என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன்.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமான ஸ்ரேயா, திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல என்று கூறியிருக்கிறார். #Shriya
இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்கபெருமையாக உள்ளது. கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும்கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகி றேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப் படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகி றார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்?. சுவாரசியம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.
கதை நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம்தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்