MeToo ஆண்ட்ரியா – படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டுமல்ல
27 Oct,2018
வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள
து. எப்போதுமே துணிச்சலான கருத்துகளை பேசும் ஆண்ட்ரியா சமீபத்திய பரபரப் பான மீடூ ( #MeToo / MeToo ) இயக்கம் பற்றியும் துணிச்சலாக கருத்து தெரிவித் துள்ளார். ‘மீ டூ’ இயக்கத்தை வரவேற்கிறேன்.
முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா ( #Actress #Andrea / #AndreaJeremiah ), மீடூ MeToo குறித்த கேள்விக்கு கடின உழைப்புமீது மட்டுமே நம்பிக்கை என கூறி யிருக்கிறார். தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங் கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைத்தது இல்லை. படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல.
வேலைக்காக படுக்கைக்குசெல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்க ள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என்மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும். நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.
நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப் பவள் நான்’ என்று கூறியிருக்கிறார்.