மக்களின் ஆதரவின்றி அரசியலில் சாதிக்க முடியாது: ரஜினிகாந்த்
24 Oct,2018
மக்களின் ஆதரவு இல்லாமல், ரசிகர் மன்றங்களை மட்டும் வைத்து அரசியல் பயணத்தில் நாம் நினைத்ததை நாம் நினைத்ததை சாதித்துவிட முடியாது என்று, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது:-
“எனது நடிவடிக்கை இன்றி ரஜினி ரசிகர் மன்றங்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சிலர் பொய் பரப்புரைகள் செய்கின்றனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். மன்றங்களின் அனைத்து நடைமுறைகளும் எனது அனுமதியுடன் தான் இடம்பெறுகின்றன.
தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி, அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் எனது அரசியல் பயணம்.
நாம் எதற்காக அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக முக்கியம் எனக் கூறிய ரஜினிகாந்த், ஒவ்வொருவரும் உங்கள் குடும்பங்களை பராமரித்துவிட்டு மன்றப் பணிகளுக்கு வாருங்கள் என தொண்டர்களிடம் கூறினார்.
மன்றத்தவர்களிடம் நான் கூறிய வேலை பணம் செலவு செய்யும்படி அல்ல. மன்றத்திற்காக எந்த தொண்டர்களும் பணம் செலவு செய்ய வேண்டாம்.
ரசிகர் மன்றங்களால் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது என்றும் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை மன்றத்தில் அனுமதிக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்