காதலிப்பதாக நேரில் வந்து யாருமே கூறவில்லை – நடிகை மஞ்சிமா மோகன்
28 Jun,2018
தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான
மஞ்சிமா மோகன் இவர் அச்சம் என்பது மடமையடா, சத்திரியன் உட் பட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒருபடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் ரிஷியை அவர் காதலிப்பதாக திரையுலகையும் தாண்டி பரவலாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை உண்மையிலே என்னுடைய நல்ல நண்பன் நான்ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால் குறைந்தபட் சம் அதைப்பற்றி ஒருபுகைப்படமாவது வெளி வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதா வது கதைகட்டி விடுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறார். மேலும் இது வரை யாரும் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவே இல்லை. அப்படியே கூறினாலும் தனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக் கை இல்லை என்றும் கூறி இருக்கிறார். #ManjimaMohan ( நடிகருடன் காதலா – மஞ்சிமா மோகன் விளக்கம் )