சென்னைக்கு வரும் அவர், மெரினா கடற்கரைக்குச் செல்கிறார். அந்தக் கடற்கரைக்குச் செல்லாதவர்கள் யார்தான் உண்டு? அழகான காட்சிகளையும், அலங்கோல காட்சிகளையும் அனுதினமும் தந்துகொண்டிருப்பதில் மெரினா என்றால் மிகையாகாது.
அதனால்தான் பலமொழி மாநிலத்தவரும் அங்கு படையெடுக்கின்றனர். மெரினாவைக் காணும் அதே ஆசையில்தான் நாம் சொல்லும் நபரும் அங்கே பயணிக்கிறார்.
காதலர்கள் மீது பொறாமை!
மாலை வேளை வந்துவிட்டது என்பதைச் சூரியனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தது கடிகார முட்கள். அந்த நேரத்தில், அப்படியே மண்ணில் கால்பதித்து அமர்கிறார் நம்மவர்.
அப்போது, ஒரு பொருளுக்கு இரண்டு குழந்தைகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறார். அந்தப் பொருள் ஒரு குழந்தைக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், அதே பொருள் மற்றொரு குழந்தைக்குக் கிடைக்கவில்லை.
இதைக் கவனிக்கும் அவர், இதுதான் உலகமா என்று விந்தையுடன் யோசிக்க ஆரம்பிக்கிறார். அடுத்து, அதே இடத்தில் ஒரு காதலர்களைப் பார்க்கிறார். அவர்கள் அடிக்கடி சிரித்து மகிழ்வதையும், அடித்து விளையாடுவதையும் பார்த்து பொறாமை கொள்கிறார்.
அதைப் பார்க்கும் நம்மவர், `நாமும் காதலித்திருக்கிறோம்ஸ ஆனால், இதுபோல் நடந்துகொண்டதில்லையேஸ காதல் என்பது கண்கள் வரை அல்லவா’ என்று ஏங்குகிறார்; `இவர்களிடம் காதல் எல்லை தாண்டிப் போகிறதே’ என்று எண்ணுகிறார்.
அதற்குமேல் அந்தக் காட்சிகளைச் சகித்துக்கொள்ளாதவர், அதிலிருந்து பார்வையை விலக்கிக் கடலில் பயணிக்கும் கட்டுமரங்களையும், படகுகளையும் பார்க்கிறார். அதன்மூலம் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் மீனவர்களின் உயர்ந்த நிலையை எண்ணிப் பெருமைகொள்கிறார்.
நண்டினால் பயம்!
அந்த நேரத்தில்தான் அவர் காலடியில் வந்து ஒரு பெரிய நண்டு விழுகிறது. இதை ஓர் அலை, துணிச்சலுடன் செய்துவிட்டு மறைந்துவிடுகிறது. ஆனாலும், அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பயத்தில், ஒருவித பதற்றத்தில் அப்படியே எழுந்துநிற்கிறார். கரையில் விழுந்த நண்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது.
இது, அவருக்கு நம்பிக்கையை விதைக்கிறது. சமூகம் நம்மை வெளியே தள்ளினாலும், அந்தச் சமூகத்துக்குள்ளேயே நாம் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலை அவர் மனம் இறுகப்பிடித்துக்கொள்கிறது. அந்த ஆசையிலேயே அங்கேயே உறங்கிவிடுகிறார்.
மு.கருணாநிதியுடன்ஸ கண்ணதாசன்
தட்டியெழுப்பிய போலீஸ்!
அடுத்தநொடி, போலீஸாரின் கைத்தடி தட்டியெழுப்புகிறது. ஒருகாலத்தில் தந்தை பெரியாரின் கைத்தடி, நாட்டிலிருந்த சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியதுடன் உண்மையை உலகுக்கும் உணர்த்தியது.
அதன்மூலம் மக்களை விழித்துக்கொள்ளவும் வகை செய்தது. ஆனால் இன்று, ஆட்சியின் அதிகாரபலத்தால் விழித்திருக்கும் மக்களைக்கூடக் காவல் துறையின் கைத்தடிகள் காயப்படுத்தி, `இனி நீங்கள் விழிக்கவே கூடாது’ என்று எச்சரிக்கின்றன. அந்த நிலைதான் அவருக்கும்.
“ஏய், நீ யாருஸ இங்கே எதற்கு வந்தாய்ஸ சொந்த ஊரு எதுஸ கையில் எவ்வளவு காசு வைத்திருக்கிறாய்ஸ கடற்கரையில் தூங்கக்கூடாது என்று உனக்குத் தெரியாதாஸ இங்கிருந்து எழுந்து போ” எனத் துளைத்தெடுத்தது அந்தப் போலீஸ்காரரின் குரல்.
உண்மையிலேயே நம்மவரிடம் அன்று பைசா இருந்து போலீஸாரிடம் கொடுத்திருந்தால், நிச்சயம் அங்கு உறங்குவதற்கு இடம் கிடைத்திருக்கலாம்.
ஏனென்றால், இந்த உலகமே லஞ்சம், ஊழல் உள்ளிட்டவற்றில்தானே கொடிகட்டிப் பறக்கிறது. போலீஸாருக்குப் பயந்து அங்கிருந்து போனவர் மீண்டும் அதே கடற்கரையில் வேறோர் இடத்தில் படுத்தத் தூங்க ஆரம்பித்தார்.
நம்பிக்கை விதை!
இந்த முறை சில்மிஷம் செய்யும் காற்றுக்கூட அவரது தூக்கத்தைக் கெடுக்கவில்லை. ஓடிப்போன சூரியன் மீண்டும் வந்ததைக் கண்டு பொழுது புலர்ந்துவிட்டதை நம்மவர் உணர்ந்துகொண்டார்.
இப்போது ஒரு முடிவுக்கு வந்தார், அவர். எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும் என்று. ஆம், அப்படிப்பட்ட முடிவை இந்த உலகில் எந்த மனிதன் எடுத்தாலும், அதுவும் குறிப்பாகக் கெளரவம் பார்க்காமல் நேர்மையுடனும், திறமையுடனும் உழைத்தால் நிச்சயம் ஜெயிப்பான். அதனால்தான் நம்மவரும் பின்னாளில் ஜெயித்தார்.
அவர், வெற்றி கண்டது திரைத்துறையில்ஸ அதன்மூலம் நின்றார் பலருடைய மனத்திரையில்! எத்தனையோ தோல்விகளையெல்லாம் தாங்கிக்கொண்ட அவர், அதன் மொத்த வலிகளையெல்லாம் தன்னுடைய முதல் பாட்டிலேயே நம்பிக்கை விதையாய் விதைத்தார்.
கலங்காதிரு மனமே – உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே!”
- என்று எழுதினார்.
கண்ணதாசன்அரசியலில் சூடு!
உண்மையில், அவருடைய கனவு வென்றது. அந்த வெற்றி, அவரை அரசியல் பாதைக்கும் அழைத்துச் சென்றது. சினிமாவிலிருந்து வந்தவர்கள் அரசியலிலும் ஜெயித்திருக்கிறார்களேஸ அதன் தொடர்ச்சி, இன்றும் அரங்கேறுகிறதே? நம்மவரும், நட்பின் மூலம் அரசியலுக்குள் புகுந்தார். ஆனால், போகப்போக அரசியல் நமக்குச் சரிப்பட்டு வராது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஒருமுறை தேர்தலில் தோல்வியுற்ற அவர், அதன் வருத்தத்தை, வலி மிகுந்த வேதனையை இப்படிப் பதிவு செய்தார்.
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே!
பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே!”
என்று `பலே பாண்டியா’ படத்தில் எழுதினார்.
அதேபோல், அரசியலில் சூடுபட்டுக் கொண்டதை `ஆலயமணி’ படம் மூலம் உணர்த்தினார். அந்தப் படத்தில் எழுதியுள்ள ஒரு பாடலில்,
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா!”
- என்று உண்மையை உணர்த்தியிருப்பார்.
இப்படி, பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான் அவர், “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்.
அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது” என்று எல்லோருக்கும் அறிவுரை வழங்கும் அளவுக்கு அனுபவமிக்கவராக விளங்கினார். அவர், வேறு யாருமல்லஸ கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்த தினம் இன்று.