விஜய் விருதில் கொந்தளித்த பார்த்திபன்
04 Jun,2018
விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கொந்தளிப்புடன் பேசினார். 10வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், தனுஷ், நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை பெற்றுக் கொண்ட மாநகரம் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இயக்குனர் பார்த்திபன் வழங்கினார். அப்போது பேசுகையில், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன்.
சிறந்த முறையில் துப்பாக்கியால் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும், பொதுமக்களுக்கு நடுவே, வேன் மீது ஏறி சரியாக குறிபார்த்து உரிமைக்காகவும். வயிற்றுக்காகவும் போராடிய மக்கள் மீது சுட்ட அவருக்கு விருது கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மேடைக்கு அழைத்தே இதை கொடுக்க வேண்டும், இது எனது வேண்டுகோள்.
பின்னர் சமூகவிரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளிவிட வேண்டும், நான் பொதுமக்களை சொல்லவில்லை. இதுபோன்ற பெரிய மேடையில் நல்ல விஷயம் சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டதாக தெரிவித்தார். பார்த்திபனின் இந்த பேச்சை அரங்கத்தில் இருந்த பலரும் வரவேற்றனர்.