காலா வெளியாகுமா? ஈழத்தமிழர்களால் காலாவுக்கு வந்த ஆபத்து; என்ன செய்யப்போகிறார் ரஜினி?
01 Jun,2018
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள காலா படம் உலகம் முழுவதும் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் அவருடைய காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என ஒரு சில கர்நாடக அமைப்புகளும் கட்சிகளும் கூறி வந்தன.
இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அமைப்பு காலா படத்தை வெளியிட தடை விதித்து இருந்தது. மேலும் முதல்வர் குமார்சாமியிடமும் காலா படத்தை வெளியிட விருப்பமில்லை என மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்து செய்தியாளர்கள் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கேட்டதற்கு அந்த மனு பரிசீலனையில் உள்ளது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஈழத்தமிழர்களால் காலாவுக்கு வந்த ஆபத்து; என்ன செய்யப்போகிறார் ரஜினி?
தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து வெளிவருகின்ற 'காலா' என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே தமிழ் திரைப்பட விழாக்குழு உட்பட நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மானம் எடுத்திருந்தார்கள்.
அதேபோன்று சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் 'காலா' திரைப்படத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் காலா திரைப்படத்தையும் ரஜினியையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு வருவதோடு, வரும் சில தினங்களில் நோர்வே, சுவிஸ்சை தொடர்ந்து மற்றும் பல நாடுகளிலிருந்து இது தொடர்பில் அறிவிப்புக்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
காலா திரைப்பத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் சமூகவலைத் தளங்கள் வழியாகவும், குறுஞ்செய்திகள் ஊடாகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை எப்படியாவது காலா திரைப்படத்தை வெளியிட்டேயாகுவோம் என்று தெரிவிக்கும் வெளியீட்டாளர்கள் தமிழ் மக்கள், குறிப்பாக ரஜினி ரசிகர்கள் திரைப்படத்தை வெற்றிபெறவைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் காலாவா? ஈழத்தமிழர்களா?