ஆன்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அர்ஜுன்
18 May,2018
கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அர்ஜுனின் பெயரை தமிழ் ரசிகர்கள் என்றும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
படவாய்ப்புகள் குறைந்து விட்டதால் ஆன்மீக வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம்.
ஆக்சன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அந்த ஆன்மீக அர்ஜுனின் இலட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறதாம்.
கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் .
இதன் செதுக்கல்களை அர்ஜுன் செய்வது போன்ற காணொளி வைரலாகி வருகின்றது. இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் இனி திரைப்பபடங்களில் காண முடியாதா.. என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.
யாருக்கும் இந்த அதிஷ்டம் இலகுவாக கிடைக்காது என்றும் சமூகவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆஞ்சநேயர் பக்தரான இவர் ஆஞ்சநேயர் கோவில் சிலை செதுக்குவதால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்றும் பலர் கூறியுள்ளனர்.
புரூஸ் லீ நடித்த எண்டர் த டிராகன் படம் பார்த்ததில் இருந்து கராத்தே மீது இவருக்கு ஆர்வம் பிறக்க தனது பதினாராவது வயதில் கராத்தே பயிற்சி பெற்ற இவர் அதில் கருப்பு பெல்ட்டும்பெற்றுள்ளார்.
இவரது தந்தை ஒரு நடிகராக இருந்த போதிலும் அர்ஜுன் அந்தத் துறைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. ஆகவே இளம் வயதில் இவருக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்தார்.
பிரபல கன்னடப்பட இயக்குனரான ராஜேந்திர சிங் பாபு இவரது தந்தையை சமாதானப்படுத்தி Simhada Mari Sainya என்கிற கன்னடப் படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார் .
அசோக்பாபு என்கிற இவரது பெயரை அர்ஜுன் என்று மாற்றி வைத்தவரும் அவர்தான். அதன் பிறகு பல கன்னடப் படங்களில் நடித்த இவரது திறமையைப் பார்த்த நடிகர் ஏவி.எம்.ராஜன், இயக்குநர் இராம.
நாராயணனிடம் இவரை அறிமுகப் படுத்தினார். அதைத் தொடர்ந்து நன்றி படத்தில் இவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் இராம.நாராயணன். அப்படம் தமிழில் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்று தந்தது.