வாதம்விவாதம்: நதிகள் இணைப்பு - ஆபத்தை உணராமல் பேசுகிறாரா ரஜினி?
11 May,2018
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் என்று காலா இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
"இது காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியா அல்லது கர்நாடகத்தை நேரடியாக எதிர்க்க தயக்கமா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
''என் மேல பொறாமை வரத் தானே செய்யும்': காலா விழாவில் ரஜினி
"இளம் நடிகைகளுடன் நடிக்கப் போவதில்லை" : நடிகர் ரஜினி
"அணைகள் ஆபத்தானது அதைவிட ஆபத்தானது நதிகளை இணைப்பது. தடுப்பணைகளை கட்டலாம் அது நீரின் வேகத்தை குறைக்கும். நதியின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். சுற்றுசூழலுக்கு ஆபத்தும் இல்லை. கிராமங்களும் நீரில் மூழ்காது. தடுப்பணைகள் உடைந்தாலும் அழிவின் அளவு குறைவு. அணைகள் உடைந்தால் பேராபத்து. எந்த அணைக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. அதை உணராமல் இப்படி அறிக்கை விடுவதும் மிஸ்ட் கால் கொடுக்க சொல்லுவதும் மக்களை முட்டாளாக்குவதும் ஒன்றே," என்கிறார் கிருஷ்ண குமார் எனும் நேயர்