ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்
22 Apr,2018
விஜயகாந்த் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவரது சினிமா சாதனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. மதுரையிலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவரை சினிமாவுக்கு ஒரு ரஜினி போதும் என்று விரட்டியடித்தது சென்னை.
அந்த வெறியில் இன்னொரு காந்தாக ஜெயித்துக் காட்டுகிறேன் என்று விஜயகாந்த் என்று பெயர் மாற்றி பெரும் போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் அறிமுகமானார்.
சவால் விட்டது போல் ரஜினியை விட அதிக படங்களில் நடித்தும் விட்டார். அவரது சாதனைகளில் முக்கியமானது 1984ம் ஆண்டு மட்டும் 18 படங்களில் நடித்தது சாதனை. அதாவது சராசரியாக 20 நாட்களுக்கு ஒரு படம்.
ஜனவரி 1, குடும்பம், வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, சத்தியம் நீயே, நாளை உனது நாள், சபாஷ், வீட்டுக்கு ஒரு கண்ணகி, மாமன் மச்சான், நல்ல நாள், வெள்ளைப்புறா ஒன்று, குழந்தை யேசு, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், வெற்றி, தீர்ப்பு என் கையில், மெட்ராஸ் வாத்தியார், மதுரை சூரன் ஆகிய படங்கள்தான் அவர் ஒரே ஆண்டில் நடித்தது.
இதில் வைதேகி காத்திருந்தாள், நூறாவது நாள் வெள்ளிவிழா படங்கள். வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், இது எங்க பூமி, குடும்பம் ஆகிய படங்களில் அவரது கேரக்டர் பெயர் விஜய்.
4Facebook4 Twitter0 Google+0