அனுஷ்காவை கைவிட்ட பிரபாஸ்: - ரசிகர்கள் அதிர்ச்சி
12 Apr,2018
பாகுபலி காதல் ஜோடிகள் பிரபாஸ், அனுஷ்கா நிஜவாழ்விலும் காதல் ஜோடிகளாக உலா வருவதாக திரையுலகில் அடிக்கடி பேச்சு எழுகிறது. இதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார் அனுஷ்கா. ஒரு கட்டத்தில், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான். எங்களுக்குள் காதல் இல்லை’ என்று அதிரடியாக தெரிவித்தார். அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் அவர்களது குடும்பத்தினர் வேறு வேறு வரன்களை பார்ப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆனால் அனுஷ்காவைத்தான் பிரபாஸ் மணக்க வேண்டும் என்று இருவரது ரசிகர்களும் இணைய தளங்களில் மெசேஜ் போட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபாஸுக்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் பரவி உள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடித்த, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் நிஹாரிகா கொனிடெலா. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் உறவுக்காரர். பிரபாஸுக்கும், நிஹாரிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது.
இதை சிரஞ்சீவி மறுத்திருக்கிறார். நிஹாரிகாவுக்கு திருமணம் என்று வரும் தகவல்கள் உண்மை அல்ல. அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடனடியாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை’ என்றார். நிஹாரிகாவை பிரபாஸ் மணக்கவுள்ளதாக கிசுகிசு வெளியானதையடுத்து பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்கள் தங்களது அதிருப்தியை பதிவு செய்துவருகின்றனர். அனுஷ்காவை விட்டு வேறு நடிகையை பிரபாஸ் மணக்கக்கூடாது என்று அவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.