ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்
03 Apr,2018
இசை ஞானி இளையராஜாவின் நிகழ்ச்சியை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமானது.
ஞானியின் வெளிவந்த பாடல்களில் முத்தான பாடல்கள் பலதும் இடம்பெற்றது.
ஹங்கேரி புடாபெஸ்ட் ஆரக்கஸ்டரா Hungary Budapest symphony orchestra அணைத்து பாடல்களையும் இசைத்து ராஜாங்கம் நடத்தினார்கள்.
முழுவதும் அகோஸ்டிக் (Acoustic) வடிவத்தில் இசையை கலைஞர்கள் வாசித்தார்கள்.
அதை அனுபவிப்பதற்கு அவதானிப்பும், அமைதியும் முக்கியம். நம்மில் பெரும்பாலோரின் அது இல்லை!!
பிரபலமான பின்னணிப் பாடகர்கள் இல்லாமேயே அருமையான பாடல்களை தந்தார்கள்.
அவர்கள் பாடிய அணைத்து பாடல்களும் எந்த விதத்திலும் சோடை போகவில்லை.
நானிருந்த இடத்தில இருந்து கேட்க மிகவும் தெளிவான ஒலியாக இருந்தது.
மேடையில் வண்ண விளக்குகள், லேசர் சமாச்சாரங்கள், ஒளி வடிவங்கள் எதுவும் இருக்கவில்லை.
கூட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது. மற்றவர் வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு வராதவர்கள் பாவம் துரதிஷ்டசாலிகள்.
சில ஜந்துகள் நிகழ்ச்சியை குழப்பவே டிக்கெட் எடுத்து வந்திருப்பார்களோ.
பீர் பாட்டில், விசில் கடைசிவரை தொடர்ந்தது.
இடையில் போலீஸ் வேறு வந்து இந்த ஜந்துக்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது.
இசை ஞானியும் ஓரிரு தடவைகள் அது குறித்து குறிப்புணர்த்தினார். எவனுக்கு புறிய போகிறது.
நம்மவரிடம் கைதட்டல்களை கூட யாசித்து தானே வாங்கவேண்டி இருக்கிறது.
என்ன செய்ய இசைஞானியையும் அனிருத்தையும், இமானையும் ஒரே எடையில் போட்டு பார்க்கும் கூட்டத்தில் எதை எதிர்பார்க்கலாம்