திருமணத்திற்கு தயாராகும் தீபிகா!
26 Mar,2018
‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா தனது ரஷ்ய பாய்பிரண்டை கடந்த வாரம் ரகசிய திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனுஷுடன் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்த சோனம் கபூர் தனது நீண்ட நாள் பாய்பிரண்டை வரும் மே மாதம் மணக்கிறார். ரஜினியுடன், ‘கோச்சடையான்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். இவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்ய எண்ணி உள்ளனர் என திரையுலக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

‘பத்மாவத்’ படத்தில் நடித்தபோது கனமான ஆடை, ஆபரணம் அணிந்து நடித்ததால் முதுகு, கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார் தீபிகா. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனது பெற்றோர் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது அவரிடம் திருமணத்துக்கான பேச்சு நடந்தது. இந்த ஆண்டில் தீபிகாவின் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் எண்ணியிருக்கின்றனர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். திருமணத்துக்கான நகை, ஆடைகளை வாங்க குடும்பத்தினர் விரும்பினர். தாயார் மற்றும் தங்கை அனிஷா படுகோன் ஆகியோருடன் பிரபல நகை கடைகளுக்கு சென்று திருமணத்துக்கு தேவையான நகைகள் தேர்வு செய்து வருகிறார் தீபிகா. ரன்வீர், தீபிகா குடும்பத்தினர் ஏற்கனவே திருமணம் பற்றி பேசி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.