விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எஸ்.ஏ.சி
02 Feb,2018
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சட்டம் ஒரு இருட்டறை தொடங்கி பல அதிரடி அரசியல் படங்களை இயக்கியவர். அதோடு அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் தனது மகன் விஜய்யை எதிர்காலத்தில் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்து வந்தது. அதன்காரணமாகவே விஜய் ரசிகர் மன்றம் ஒரு தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்தது. அதனால் அதன்பிறகு விஜய் விரைவில் தனித்து அரசியலில் பிரவேசிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
அதன்பிறகு எஸ்.ஏ.சி அளித்த ஒரு பேட்டியில், விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது அரசியலில் பணம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் குறைந்து விட்டது என்று சொன்னார். ஆனால், தற்போது ரஜினி, கமல் அரசியலுக்கு வரப்போவதை அறிவித்து விட்டதை அடுத்து விஜய்யும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், எஸ்.ஏ.சியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம். காரணம், நான் அவருக்கு ஒரு பாதையை ஏற்படுத்திக்கொடுத்து விட்டேன். அதனால் இனிமேல் எதுவாக இருந்தாலும் அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.