எந்த மாற்றமும் இல்லை!
05 Jan,2018
தெலுங்கு நடிகர் நாக சைதான்யவை திருமணம் செய்தபின், ஐதராபாதிலேயே செட்டிலாகி விட்டார், சமந்தா. ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில், விஷாலுடன்
இரும்புத்திரை என்ற படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் கணிசமான படங்கள், அவரது கைவசம் உள்ளன. சமீபத்தில் ஒரு பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார், அவர். அப்போது, 'திருமணத்துக்கு பின்,
என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. எல்லாம், வழக்கமான நிகழ்வாகவே இருக்கிறது. திருமணமான சில நாட்களிலேயே படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டேன்' என்றார்.