சங்கமித்ராவில் திஷா பதானி இன்னும் உறுதியாகவில்லையாம்?
05 Jan,2018
விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், அந்தப்படம் வெளியாகும் முன்பே அறிவித்த படம் தான் சங்கமித்ரா. பாகுபலிக்கு இணையான பட்ஜெட்டில் உருவாகும் அந்த சரித்திர படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கயிருந்து படம் பற்றி அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில் திடீரென்று ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகினார்.
அதையடுத்து நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளிடம் சங்கமித்ரா என்ற டைட்டில் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் யாரும் ஒத்துவரவில்லை. பின்னர், ஹிந்தி நடிகை திஷாபதானி சங்கமித்ராவில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதேசமயம், சங்கமித்ராவுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த சுந்தர்.சி, கலகலகப்பு-2 பட வேலைகளில் இறங்கினார். அதேப்போல் ஆர்யா, கஜினிகாந்த் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஜெயம்ரவி டிக் டிக் டிக் படத்தை அடுத்து அடங்கமறு படத்தில் ஒப்பந்தமாகி விட்டார்.
ஆக, சங்கமித்ரா எப்போதும் தொடங்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில், திஷா பதானி அளித்துள்ள ஒரு பேட்டியில், சங்கமித்ரா படக்குழு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த படத்தில் நடிப்பது பற்றி இன்னும் உறுதியாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.