என்னப்பா இவ்வளவு கருப்பா அசிங்கமா இருக்கே..! ரஜினியை பாதிபடத்தலேயே தூக்கி எறிந்த இயக்குனர்ஸ!!
31 Dec,2017
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். அதுபோல ரஜினியின் நடிப்பை, ஸ்டைலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. பிறந்த குழந்தை முதல் சாகும் தருவாயில் உள்ள முதியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஆனால் ஆரம்ப காலக்கட்டத்தில் ரஜினியை கருப்பாய் இருக்கிறாய் என ஒரு பிரபல டைரக்டர் படத்தில் இருந்தே தூக்கி எறிந்து இருக்கிறார்.
அவர் கன்னடத்தின் பிரபலமான டைரக்டர் புட்டண்ணா ஹானகல். இவர் கடந்த 1975ம் ஆண்டு கன்னடத்தில் நாகரஹாவு என்ற படத்தை எடுத்து கொண்டிருந்தார்.
அந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணுவர்த்தன் அறிமுகமானார். வில்லான நம்ம ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பாதிப்படம் வரை வளர்ந்து விட்டது. அதற்கு முன்பு வரை கதாநாயகன் மற்றும் வில்லன் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது.
அதன்பிறகுதான் கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் மற்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் நல்ல கலராக ரோஸ் நிறத்தில் இருந்தார். ரஜினிகாந்த் அட்டை கருப்பாக இருந்தார். பிரேமில் பார்ப்பதற்கு இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை.
எனவே ரஜினியை அழைத்து என்னப்பா இவ்வளவு கருப்பா இருக்கே என கூறினார். மேலும் படத்தில் இருந்தே தூக்கி விட்டார். அவருக்கு பதிலாக அம்பரீஷ் என்ற இளைஞர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் அதுவரை நடித்ததற்கு ரஜினிக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ரஜினி மிகவும் கவலை அடைந்தார்.
இந்த படத்தில் அறிமுகமான விஷ்ணுவர்த்தன் மற்றும் அம்பரீஷ் ஆகிய இருவரும் கன்னடத்தில் கொடிகட்டி பறந்தனர்.
படத்தில் இருந்து தூக்கப்பட்ட ரஜினி உலகம் முழுக்க பிரபலமாகி விட்டார். இந்த மூவரும் தமிழில் விடுதலை படத்தில் ஒன்றாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை படத்தில் இருந்தே தூக்கி எறிந்த இயக்குனர் புட்டண்ணாவிடம்தான் பாரதிராஜா உதவி இயக்குனராக தொழில் கற்று கொண்டார் என்பது கூடுதல் தகவல்.