நான் அரசியல் கட்சி தொடங்குகிறேன் - ரஜனி இன்று அறிவிப்பு: எந்திரன் படமும் கேள்விக் குறியில் தான்VIDEO....
31 Dec,2017
பல காலமாக அரசியலுக்கு வருவேன், இல்லை வரமாட்டேன்... காலம் தான் பதில் சொல்லும் என்று பேசிவந்த ரஜனி காந். 31ம் திகதி அறிவிப்பேன் என்று கூறி இருந்தார். 31ம் திகதியும் அவர் அரசியலுக்கு வரமாட்டார். எல்லோரையும் ஆண்மீக வழியில் செல்ல சொல்வார் என்று அதிமுக அமைச்சர் கூறி, ரஜனி மீது சேறை வாரி அடித்தார். பல அரசியல்வாதிகள் பல மட்டங்களில் பேசினார்கள். அரசியல் என்றால் சும்மாவா ? ரத்தப் பலி கொடுக்க வேண்டி வரும் என்று எல்லாம் பேசினார்கள். ஆனால் இன்றைய தினம்(31) தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக ரஜனி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சற்று முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில். அரசியலில் ஈடுபட்டால் ரஜனி இனி எவ்வாறு நடிப்பார் ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இது தான் முதல் தடவை அல்ல. ஆனால் சொந்த தொகுதியில் போட்டியிட்டு சிவாஜி கனேஷன் டெபாசிட் இழந்தார். பின்னர் விஜயகாந் அரசியலுக்கு வந்து மண் கவ்வினார். அதுபோல ரஜனியின் அரசியல் வாழ்க்கை என்பது, அவர் சேர்த்துவைத்துள்ள சொத்தை அழிக்க வழிகோலுமே தவிர. அவர் அரசியலில் பிரகாசிக்கப் போவது என்பது பெரும் கேள்விக் குறிதான். இது ஒன்றும் சினிமா அல்ல. வீர வசனங்கள் பேச.
இது இவ்வாறு இருக்க, ரஜனியின் எந்திரன் 2.0 படமும், இதனால் தமிழ் நாட்டில் எடுபடாமல் போகலாம் என சங்கர் நினைப்பதாகவும். அப்படம் வெளியான பின்னர் அரசியல் பற்றி அறிவிக்குமாறு ஷங்கர் கெஞ்சியும், ரஜனி காதுகொடுத்து கேட்க்கவில்லை என்றும்அரசியலில் நுளைந்துள்ள ரஜனியின் எந்திரன்2.00 எவ்வாறு தமிழ் நாட்டில் ஓடப்போகிறது, என்பதும் ஒரு பெரும் கேள்விக் குறியாக உள்ளது.