ரகுல் ப்ரீத் சிங்கின் ஆந்திரா மாப்பிள்ளை யார்?
13 Dec,2017
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இவரிடம் எப்போது பேட்டி அளித்தாலும் அவரின் திருமணம் குறித்த கேள்வி முன் வைக்கப்படும். அப்படி சமீபத்தில் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது ரகுல் கூறியதாவது...
திருமணம் குறித்து நான் இன்னும் திட்டமிடவில்லை. நம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நம்மால் கணிக்க முடியாது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் திருமணம் செய்பவர் ஆந்திராவை சேர்ந்தவராக கூட இருக்கலாம் என்றார்.
ரகுலின் இந்த பதிலால் அவர் யாரையாவது காதலிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் யாரையும் காதலிக்கவில்லை, என்னிடம் காதலிப்பதாக எந்த நடிகரும் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறார்.