திருமணத்திற்கு தயாராகும் அனுஷ்கா?
12 Dec,2017
தற்போது மார்க்கெட்டில் உள்ள பல நடிகைள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அவர்களில் சமந்தா, பிரியாமணி, அனுஷ்கா சர்மா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் திருமணத்திற்கு பிறகும் எந்தவித தடையுமின்றி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டில் சமந்தா, பிரியாமணி, நமீதா, அனுஷ்கா சர்மா, என பலரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தனது லண்டன் பாய் பிரண்டுடன் சில ஆண்டுகளாக நட்பு வளர்த்து வந்த ஸ்ருதிஹாசனும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து, அனுஷ்காவும் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது பாக்மதி படத்தை முடித்துவிட்டு வேறு எந்த படத்திலும் கமிட்டாகமால் உள்ளார் அனுஷ்கா. அதனால் அடுத்த ஆண்டில் அனுஷ்காவுக்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.