பார்ட்டி அட் நைட்... மும்பையில் காதலருடன் ஊர் சுற்றும் கமல் மகள்!
12 Dec,2017
மும்பை : கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் இரவில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல்லைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கமல்ஹாசனிடம் தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி, அம்மா சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி பெர்மிஷன் வாங்கிவிட்டாராம்.