’’சமுத்திரக்கனி சாரிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்..!’’ - மஹிமா நம்பியார்
11 Dec,2017
இயக்குநர் முத்தையா எடுத்திருக்கும் திரைப்படம் 'கொடிவீரன்'. சசிகுமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மஹிமாவின் அப் கம்மிங் படங்கள் பற்றி தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.
''நான் ஒரு மலையாளியாக இருந்தாலும் ஹீரோயினாக என்னை அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா தான். தொடர்ந்து தமிழ் படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அதனால் எப்போதும் எனக்கு தமிழ் சினிமா ஸ்பெஷல்.
என்னுடைய முதல் படம் 'சாட்டை' பண்ணும் போது, எனக்கு எந்தவொரு நடிப்பு அனுபவமும் கிடையாது. சமுத்திரக்கனி சார் பெரிய டயலாக்ஸ் எதுவாக இருந்தாலும், சீக்கிரமே பேசி முடித்துவிடுவார். அவரைப் பார்த்துதான் நான் டயலாக்ஸ் டெலிவரி கத்துக்கிட்டேன். என்னை சாட்டை படத்தின் ஷூட்டிங் போது நிறைய ஊக்கப்படுத்தி இருக்கார்.
எனக்கு சினிமாவில் எதாவது டவுட் வந்தால் சமுத்திரக்கனி மற்றும் அறிவழகன் சாரிடம் தான் கேட்பேன். அவர்கள் இருவரும் எனக்கு நல்ல அறிவுரை வழங்குவார்கள். 'கொடிவீரன்' படத்தில் நான் கமிட் ஆகியிருப்பது தெரிந்து சமுத்திரக்கனி சார் எனக்கு போன் பண்ணி வாழ்த்தினார். அவரிடம் கேட்கமால் முக்கியமான முடிவுகள் எடுக்க மாட்டேன்.
இந்தப் படத்தில் என்னுடன் சனுஷா, பூர்ணா இருவரும் நடித்திருக்கின்றனர். நாங்க மூன்று பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். பூர்ணாவுடன் எனக்கு சீன்ஸ் குறைவு. ஆனால், சனுஷாவுடன் எனக்கு நிறைய சீன்ஸ் இருந்தது. அதனால் இருவரும் எப்போதும் மலையாளத்தில் பேசி கொண்டே இருப்போம். நாங்கள் இருவரும் வந்தாலே மலையாள சேனல் வந்துவிட்டது என்றுதான் கிண்டல் பண்ணுவாங்க.
என் கேரியரில் ஒரு படம் செலக்ட் செய்யும் போது நான் மட்டும்தான் ஹீரோயினாக இருக்கணும் அப்படிங்குற விஷயத்தை நான் பார்க்க மாட்டேன். ஐந்து நிமிடம் ஸ்க்ரீனில் இருக்ககூடிய காட்சியாக இருந்தாலும் அதில் எனக்கு முக்கியத்துவம் இருக்கணும்னுதான் நினைப்பேன். படம் பார்த்துவிட்டு வெளியே போகும் ஆடியன்ஸ் மனதில் என் கேரக்டர் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். இரண்டு வருஷத்தில் டாப் ஹீரோயினாக வரவேண்டும் என்றெல்லாம் ப்ளான் பண்ணி எல்லாம் நான் எதுவும் செய்யவில்லை. ஸ்க்ரிப்ட் பிடித்திருந்தால் எத்தனை கேரக்டர் என்னுடன் இருந்தாலும் பண்ணுவேன்.
தற்போது, ஜி.வி பிரகாஷுடன் 'ஐங்கரன்' படத்தில் நடித்து வருகிறேன். ஜி.வி இதில் ஒரு இன்ஜீனியரிங் பையனாக வருகிறார். முன்னாடி ஜி.வி நடித்த படங்களை விடவும் இந்தப் படத்தில் வித்தியாசமான ரோலில், நடிப்பில் கலக்கிருக்கார். நடிக்குற மாதிரியே தெரியாது அவருடன் நடிக்கும் போது. ரொம்ப கெத்து இல்லாமல் இருப்பார். மலையாளத்தில் மம்முட்டி உடன் ஒரு படம் பண்ணிட்டு வரேன். ரொம்ப நல்ல ஸ்க்ரிப்ட்.
தமிழில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அருள்நிதியுடன் நடிக்கிறேன். இந்தப் படத்தின் பெயரில் வருவது போலவே இதொரு இரவில் நடக்கும் கதை. இரவில் நடக்குற கொலை அதை பின் தொடர்ந்து படம் செல்லும். நிறைய ட்விட்ஸ் படத்தில் இருக்கும். டைரக்டர் கதையை சொல்லும் போதே எனக்கு அடுத்து என்ன நடக்கப் போகுது அப்படிங்குற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய கேரக்டர் இந்தப் படத்தில் முழுவதும் வித்தியாசமாக இருக்கும்.
அட்டகத்தி தினேஷுடன் 'அண்ணனுக்கு ஜே' படத்தில் நடித்திருக்கிறேன். இதில் தினேஷுக்கு இரண்டு கெட்டப். ஒன்று அரசியல் வாதி இன்னொரு நார்மலாக வரும் பையன். என் கேரக்டர் ஒரு லுசு பொண்ணு மாதிரி வரும். எப்படி பேசணும், ட்ரெஸிங் பண்ணணும் அப்படிங்குற விஷயம் தெரியாத பொண்ணாக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் டைரக்டர் டயலாக்ஸ் ஷீட் தரவே மாட்டார். சூழ்நிலை மட்டும் சொல்லி அதற்கெற்ற மாதிரி நம்மளையே டயலாக் பேச சொல்வார். ரொம்ப சுதந்திரம் கொடுப்பார். என்னுடைய அப் கம்மிங் படங்கள் எல்லாவற்றையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்’’ என்று சொல்லி முடித்தார் மஹிமா நம்பியார்.