சோபன் பாபுவை திருமணம் செய்யாதது ஏன் ? – ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் பேட்டி

01 Dec,2017
 

 
 

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ‘வாழ்ந்ததை’ ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார்.
 
1980-ம் ஆண்டு சோபன் பாபு- ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.
 
இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது.
 
ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்: அன்புடையீர், உங்கள் நிருபர் நன்றாக குழம்பி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
 
ஆர். ஜெயராம் என்பது காலமாகிவிட்ட என் தந்தையின் பெயர். சாதாரணமாக கடிதப் போக்குவரத்து அத்தனையிலும் நான் (மிஸ்) ஜெயலலிதா ஜெயராம் என்றே கையெழுத்திடுவது வழக்கம்.
 
நான் ஜெயராமின் மகள் என்பதை உங்கள் நிருபர் நான் படித பிரஸ்ன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி ரிஜிஸ்தரை பார்த்து தெளிவடையலாம்.
 
குமாரி ஜெயலலிதா போதாது என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷனில் குமாரி ஜெயலலிதா ஜெயராம் என்ற பெருமையுடன் நான் மெம்பராகி உள்ளதையும் பதிவுப் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
 
திரு. ஷோபன் பாபுவுடன் நான் கடந்த 7 ஆண்டுகளாக ‘கோயிங் ஸ்டெடி’. அவர் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்பதைப் பெருமையுடன் உணர்வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
 
மறைக்கவும் விரும்பவில்லை அவருக்கு ஏற்கனவே மணமாகி இருப்பதால் என்னைத் தற்சமயம் மணக்க இயலாது இருக்கிறார்.
 
ஆகவே என் மிஞ்சிய வாழ்நாளை மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று இருப்பதென முடிவு செய்திருக்கிறேன்.
 
ஷோபன் பாபுவின் நட்பை நான் என்றுமே மூடி மறைத்தது கிடையாது. தென் இந்திய திரை உலகு சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்கு அறிவர்.
 
நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரை உலகில் பிரவேசம் செய்வதையோ குறித்து அலட்டிக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த பிரயத்தனப்பட்டு எதையும் மக்களிடம் இருந்து மறைக்கும் நிலைமை எனக்கு இல்லை.
 
அன்புடன் ஜெயலலிதா ஜெயராம் குமுதம்-1980 . இவ்வாறு ஜெயலலிதா எழுதியிருந்தார்..
 
மேலும்,   சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார்.
 
1980-ம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:
 
கேள்வி: ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா?
 
பதில்: ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்தான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.
 
ஆனால் எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை.
 
எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள்.
 
நானும் அப்படித்தான் முதலில் கனவுகள் கண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது.
 
அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.
 
அது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா? என கேட்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அப்படிச் செய்ய விரும்பவில்லை.
 
அவருடைய மனைவி எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எதற்காக நிராகரிக்கப்பட வேண்டும்.
 
தவிர அவர் மனைவி உடல்நிலையும் சரியில்லை. ஆரோக்கியம் இல்லை என்னை ஷோபன் பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது.
 
அப்படி இருக்க அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்.
 
இவ்வாறு ஜெயலலிதா பேட்டியளித்திருந்தார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies