ராய்லட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 50-வது படம்
01 Dec,2017
ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராய்லட்சுமி. அதன்பிறகு தென்னிந்திய மொழிப் படங்களில் பரவலாக நடித்து வந்த அவரால் முன்னணி நடிகை என்கிற அங்கீகாரத்தை பெற முடியவில்லை. இருப்பினும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் அவர், சமீபத்தில் ஹிந்தியில் நடித்து வெளியான படம் ஜூலி -2. இந்த படத்தோடு 50 படங்களில் நடித்து அரை சதமடித்துள்ளார் ராய்லட்சுமி.
ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அந்தபடம் தனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்த்தார் ராய்லட்சுமி. ஆனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான அந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் ராய் லட்சுமி.
அதையடுத்து அவரை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில், இந்த படத்தை செக்ஸ் படமென்று ரசிகர்கள் நினைத்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த காட்சிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்து விட்டனர். படத்தின் தோல்விக்கு அதுவே காரணமென்று நினைக்கிறேன். இந்த தோல்வியையும் நான் ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராய்லட்சுமி.