திருமணத்திற்கு அவசரமில்லை : காஜல்அகர்வால்
11 Nov,2017
காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழில் விமல் நடித்த இஷ்டம் படத்தில் நடித்தார். ஆனால் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் 2013ல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால் அவருக்கு முன்பே சினிமாத்துறைக்குள் வந்த அவரது அக்கா காஜல் அகர்வால் இப்போது வரை ராசியான நடிகையாக பிசியாக இருக்கிறார்.
குறிப்பாக, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வரும் அவர், குயின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில், திருமணம் குறித்து காஜலிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, எனது பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு சினிமாவில் நீண்டதூரம் பயணிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அதனால் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவே விரும்புகிறேன்.
நல்லதொரு தோழர், நேர்மையான மனிதரை தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி நான் எதிர்பார்க்கிற குணாதிசயங்கள் கொண்ட நபர் கிடைக்கும்போது திருமணம் செய்வது பற்றி யோசிப்பேன். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்கிற ஐடியா எதுவும் என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார் காஜல்அகர்வால்.