ஷாருக்கானின் சிற்றுண்டிச்சாலை இடிப்பு
09 Oct,2017
விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட ஷாருகானின் சிற்றுண்டிச்சாலையை மாநகராட்சியினர் இடித்துள்ளனர்.
இது தொடர்பாக மலும் தெரியவருவதாவது,
மும்பை மலாடு மேற்கு, பார்க் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான திரைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் நடிகர் ஷாருக்கான் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்தி வந்தார்.
நடிகரின் திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்த சிற்றுண்டிச்சாலையை இடிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை மாநகராட்சியினர் அறிவிப்புக் கடிதம் அனுப்பினர்.
எனினும் நடிகர் ஷாருக்கான் தரப்பினர் மாநகராட்சியின் அறிவிப்புக் கடிதத்திற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நீதிமன்றில் முறையிட்டனர்.
ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான சிற்றுண்டிச்சாலையை இடித்து அகற்றியுள்ளனர்