நடிகர் சங்க நிலத்தை மோசடி செய்ததாக சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார்
08 Oct,2017
...
: நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவில் அனுமதி பெறாமல் விற்பனை செய்த சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை, சங்க பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர்கள், ராதாரவி, சரத்குமார் உட்பட, நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது
பொதுக் குழு கூட்டம் இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசியதாவது: நாங்கள் கொடுத்த வாக்குறுதியிலும் விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது, நல்லதை மட்டுமே காணமுடியும்
அடுத்த ஆண்டுக்குள்... அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் கட்டடம் கட்டப்படும். கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 40 சதவீதம் வரி செலுத்தி சினிமா தொழில் நடத்த முடியாது.
சினிமா தொழில் செய்ய இயலாது 40 சதவீதம் வரி செலுத்தி சினிமா தொழில் செய்ய முடியாது. சினிமா தொழில் செயல்பட முடியாத நிலைக்கு செல்வதை தடுக்க கேளிக்கை வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். நடிகர் சங்க நிலத்தை மற்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்று விற்பனை செய்ததாக சரத்குமார் மற்றும் ராதாரவி மீது காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்படும். இவ்வாறு விஷால் கூறினார்.