பெண்ணை மையப்படுத்திய கதையில் ஹீரோவாக நடிக்கும் வரலட்சுமி
                  
                     20 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதையில், முன்னணி கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
	 
	இயக்குநர் மிஷ்கினிடம் அசோஸியேட்டாகப் பணிபுரிந்தவர் பிரியதர்ஷினி. இவர், பெண்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார். ஆக்ஷன், மர்மம், திகில், பயணம் என எல்லாமும் கலந்த படமாக இது உருவாக இருக்கிறது. சென்னை மற்றும் புனேவில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் இல்லை என்பதால், படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. ஆனால், பிரபல ஹீரோவை வில்லனாக நடிக்கப் பேசி வருகிறார்களாம். அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது.‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘விக்ரம் வேதா’ மூலம் பலரையும் ஈர்த்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.