காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா
                  
                     18 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததே. நயன்தாராவின் பரிந்துரையில் தான் சூர்யா விக்கியின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டது. விக்னேஷ் சிவன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
	விக்னேஷ் சிவனுக்கு சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சூர்யாவின் ரசிகர்களும் விக்கியை வாழ்த்தி வருகிறார்கள்.
	 
	விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை காதலி நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
	 
	அண்மையில் தான் நயன்தாரா தனது காதலர் விக்கிக்கு விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடதக்கது.