ரெஜினாவை வெளியேற்றி, என்ட்ரி கொடுத்த ரம்யா நம்பீசன்!!
                  
                     18 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் மீது சில புகார்களும் எழுந்தன.
	
	 
	
	கன்னடத்தில் ‘குருஷேத்திரா’ எனும் புராண படம் இன்றில் நடிக்க ரெஜினா கமிட்டாகி இருந்தார். இந்த படத்தில் ரெஜினாவிற்கு பதில் ரம்யா நம்பீசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
	 
	
	100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் துரியோதனனின் மனைவி கதாபாத்திரத்தை ரெஜினா நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
	 
	
	கன்னட சினிமாவை விட தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் என்பதால் கன்னட சினிமாவை ரெஜினா மறந்துவிட்டதாக கன்னட ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், இந்த பட வாய்ப்பு ரம்யா நம்பீசனுக்குப் போயுள்ளது.